Saturday 25 August 2012

பசி, தாகம் - விற்பனைக்கு

" பசி, தாகம் - விற்பனைக்கு " இது போல ஒரு விளம்பர பதாகை இருப்பின் அந்த விளம்பர பொருளை நாம் வாங்கி நுகர விரும்புவோமா? "இல்லை" என்ற பதில் அதிகமானவர்களிடம் இருந்து வரும். ஆனால் உண்மை அதுவல்ல. நம்மில் பலர் அதையே விரும்பி நுகர்கின்றோம்.பசி தீர்க்கும் விவசாய நிலமோ, தாகம் தணிக்கும் நீர் நிலைகளோ எதுவுமே நமக்கு வரைமுறை இல்லை. கல்களை நட்டு கொடிகளை நாட்டிவிட்டால் போதும் எந்த நிலம் என்று அதன் பின்னணி என்ன என்றே அறிந்து கொள்ளாமலும் அறிந்தும் அதை பற்றி சட்டை செய்யாமலும் அதன் விலை விசாரிப்பவர்களை காண்கையில் எனக்கு அவர்கள் வேறு விதமாக தெரிகிறார்கள். விபச்சார விடுதிக்கு சென்று துணியால் மூடி இருப்பது தன் தாய் அல்லது சகோதரி என்று தெரிந்தே விலை விசாரிப்பது போலவே தெரிகிறது.

Tuesday 14 August 2012

வாழிய சுதந்திர இந்தியா!!!

          சின்ன வயசில் இந்தியனாக நான் இருந்த போது பள்ளிகளில் கொண்டாடப்படும் சுதந்திர தின மற்றும் குடியரசு தின விழாக்களில் மிக ஆர்வமாக கலந்துகொள்வேன். காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்து அந்த தேசிய விழாவுக்கென பிரத்தியேகமாக துவைத்து வெளுக்கபட்ட வெள்ளை சட்டையினையும் காப்பி நிற அரைக்கால் டவுசரையும் அணிந்து கொண்டு சாப்பிடாமல் கொள்ளாமல் கொடி  ஏற்றும் விழாவுக்கு ஓடியுள்ளேன். காலையில் சட்டையில் குத்திக்கொள்ளும் இந்திய தேசிய கொடியினை இரவு வரை அகற்றாமல் அப்படியே தூங்கிய காலங்களும் உண்டு. பள்ளியில் நீராருங்கடலுடுத்த பாடலை விட ஜனகன என்ற ஹிந்தி பாடலை விரும்பி பாடிய காலங்கள் அவை. கொடி  ஏற்றி பள்ளியில் கொடுக்கும் ஆரஞ்சு மிட்டாய்களை (எண்ணிக்கையும் ஆறு அஞ்சி தான்) விட்டுக்கு பத்திரமாய் கைகளில் மூடி கொண்டு வந்து என் அக்கா, அப்பா, அம்மாவிற்கு கொடுத்து சுவைப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.

Tuesday 7 August 2012

யார் மனிதன் ?


கண்மாய்க்குள் குடியேறி வெள்ளம் வீட்டினுல் புகுந்ததாக ஒப்பாரிப்பவனும்;
காடுகளை அழித்து குடியேறி யானைகள் அட்டூளியம் என புலம்புபவனும்;
மரங்களை வெட்டி சாலை அமைத்து மழை பொய்த்தாய் பொய்யுறைப்பவனும்;
விவசாய நிலத்தில் எல்லாம் வீடு கட்டி ஒரு வாய் சோத்துக்கு  அலையப்போகின்றவனும் தான் -  இக்காலத்தில் மனிதன்.